2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வயநாடு கோரத்தில் 9 தமிழர்கள் பலி

Freelancer   / 2024 ஜூலை 31 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வயநாடு நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 9 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.

முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய இடங்களில் கடந்த 30ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலச்சரிவில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரின் உடல் அவரது சொந்த ஊரான கூடலூர் அருகே குழியம்பாறைக்கு கொண்டுவரப்பட்டது. 32 வயதான இவர் 4 மாதங்களாக கேரளாவுக்கு கட்டிட வேலைக்கு சென்றிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார்.

இதே போல் வயநாட்டின் சூரல்மலை கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் அர்ச்சகராக இருந்த கல்யாண குமாரின் உடலும் அவரது சொந்த ஊரான பந்தலூர் அடுத்துள்ள ஐயன்பள்ளிக்கு கொண்டுவரப்பட்டது.

நிலச்சரிவில் சூரன்மலை சிவன் கோவில் மண்ணில் புதைந்த போது கல்யாண குமார் பாறையின் இடுக்கில் சிக்கி உயிரிழந்தார்.

மேலும், நீலகிரி மாவட்டம் பந்தலூரைச் சேர்ந்த ஷிஹாப் என்பவர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார். சூரல்மலை பகுதியில் உள்ள பள்ளி வாசலில் ஷிஹாப் மத ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கில் பள்ளிவாசல் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டதில் ஷிஹாப் உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து, சூரல்மலையில் தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 தமிழர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 6 பேரும் கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .