Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2024 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய எல்லையை நோக்கி வரும் வங்கதேச மக்களால் இந்திய எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய பாதுகாப்பு படையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
வங்கதேசத்தில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் நாளடைவில் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
நிலைமை மோசமானதையடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதனையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தை ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டார். தொடர்ந்து, வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் நேற்று முன்தினம் (8) இரவு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இதனிடையே நேற்று இந்திய – வங்கதேச எல்லையை கண்காணிக்க மத்திய அரசு குழு ஒன்றையும் உருவாக்கியது. மேலும் சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் எனவும் மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில் வங்கதேசத்தை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் தமது அண்டை நாடான இந்தியாவில் தஞ்சம் கோரி வங்கதேச – இந்திய எல்லையில் முகாமிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, பலரும் இந்திய – வங்கதேச எல்லையை நோக்கி விரைந்த நிலையில் பாதுகாப்பு படையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
2 hours ago