2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

‘லிப்ஸ்டிக்’ ஆல் பணி இடமாற்றம்

Freelancer   / 2024 செப்டெம்பர் 25 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு பணிக்கு வந்ததால் சென்னை மேயரின் அலுவலக உதவியாளர் இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

இதுபற்றி மேலும் தெரியவருகையில்,

சென்னை மேயர் ப்ரியாவின் அலுவலக உதவியாளராக இருந்தவர் மாதவி. மேயர் செல்லும் இடங்களில் அரசு சம்பந்தமாக கூட்டங்கள், நிகழ்ச்சிகளுக்கு செல்வோர் இவரை கட்டாயம் பார்க்கலாம். மேலும், சீருடையில் இருக்கும் அவர் தமது உதட்டுக்கு லிப்ஸ்டிக் பூசிக் கொண்டு வருவதை வழக்கமாக கொண்டதாக தெரிகிறது.

எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், மக்கள் நல திட்ட நிகழ்ச்சிகள் என எங்கும் எந்நேரமும் பரபரப்புடன் மேயர் ப்ரியா செல்லும் போது அவரது முன்னே மாதவியும் அதே லிப்ஸ்டிக் பூசி பந்தாவாக சென்று வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், மகளிர் தினத்தின் போது பெஷன் ஷோ ஒன்றில் மாதவி கலந்து கொண்டது பார்ப்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளதோடு விமர்சனங்களை எழுப்பியதாகவும் தெரிகிறது.

அவரின் இதுபோன்ற நடவடிக்கைகளை அறிந்த மேயரின் தனி உதவியாளர் மாதவியை அழைத்து உதட்டுக்கு சாயம் பூசிக் கொண்டு வருவது கூடாது என்று கண்டித்துள்ளார். ஆனால் அவரின் பேச்சை கேளாமல் மாதவி உதட்டுச்சாயத்துடன் உலா வந்ததாக தெரிகிறது.

இதையடுத்து, அவர் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கோரி, ஆகஸ்ட் 6ம் திகதி மெமோவும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து மாதவியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அவர், இது போன்ற அறிவுறுத்தல்கள் மனித உரிமைக்கு எதிரானது. யாரிடமும் பேசக்கூடாது, உதட்டுச்சாயம் அணியக்கூடாது என்று எந்த அரசாங்க உத்தரவும் இல்லை. அதுபோன்ற உத்தரவுகள் இருந்தால் காட்டுங்கள் என்று கூறி உள்ளார். அதையே தமது விளக்கமாகவும் அனுப்பி வைத்திருக்கிறார்.

இந்நிலையில், மாதவியின் விளக்கத்தை ஏற்க மறுத்து, அவரை உடனடியாக பணி இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஒரு உதட்டுச்சாயம் பணியிட மாற்றம் வரை சென்றுவிட்டதே என்று விமர்சனங்கள் எழுந்தவண்ணமுள்ளன.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .