Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2024 செப்டெம்பர் 03 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
லஞ்சப் பணத்தை கழிவறை கோப்பைக்குள் போட்டு விட்டு தப்ப முயன்ற தீயணைப்பு துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு பொலிஸார் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். கழிவறைக்குள் போட்ட பணத்தை சாக்கடையை தோண்டி லஞ்ச ஒழிப்புத்துறை மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை போரிவிலி பகுதியில் வசித்து வரும் தனியார் நிறுவன அதிகாரி ஒருவர் ஹோட்டல் ஒன்றை அமைக்க முடிவு செய்திருந்தார். இதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்து வந்த அவர் ஹோட்டலுக்கு குழாய் வழியாக கியாஸ் இணைப்பை கேட்டு விண்ணப்பித்து இருந்தார். மும்பையில் பெரும்பாலும் வீடுகளுக்கு கியாஸ் குழாய் வழியாக தான் வழங்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து கியாஸ் நிறுவனத்தினர் குழாய் வழியாக கியாஸ் இணைப்பு வழங்க வேண்டும் என்றால் தீயணைப்பு துறையினரிடம் தடையில்லா சான்று பெற்று வருமாறு கூறியுள்ளனர். இதையடுத்து தீயணைப்பு துறையினரிடம் கியாஸ் இணைப்பு பெற தடையில்லா சான்று தருமாறு தனியார் நிறுவன அதிகாரி விண்ணப்பித்து இருந்தார். அப்போது தீயணைப்பு துறை அதிகாரி பிரகால்ட் சிதோலே என்பவர் அவரிடம் லஞ்சம் கேட்டுள்ளார்.
1 லட்சத்து 30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் கொஞ்சம் குறைத்து தருவதாக சொல்லியிருக்கிறார். இப்படி பேரம் பேசியதில் முடிவில் ரூ.80 ஆயிரம் லஞ்சம் பெற தீயணைப்பு துறை அதிகாரி ஒப்புக்கொண்டார். இதற்கிடையே தனியார் நிறுவன அதிகாரி லஞ்சம் கேட்டது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் கொடுத்த யோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ.80 ஆயிரத்தை கொண்டு சென்றார்.
அதன்படி மறுநாள் தனியார் நிறுவன அதிகாரி தீயணைப்பு துறை அதிகாரியின் வீட்டுக்கு சென்று பணத்தை கொடுத்தார். அதை வாங்கிவிட்டு செல்லும்போது லஞ்ச ஒழிப்பு துறையினர் தன்னை பிடிக்க வருவதை அறிந்துகொண்டார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அவர் உடனடியாக வீட்டின் கழிவறைக்கு சென்று லஞ்சப் பணம் 80 ஆயிரத்தையும் கழிவறை கோப்பைக்குள் போட்டுவிட்டார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை செய்தனர். மேலும் தீயணைப்பு துறை அதிகாரி கழிவறையில் இருந்து வந்ததை பார்த்ததால் உடனடியாக கழிவறைக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் கழிவறை குழாய் செல்லும் சாக்கடையை தோண்ட முடிவு செய்தனர். இதையடுத்து துப்புரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு சாக்கடையை தோண்ட முடிவு செய்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சாக்கடையில் இருந்து கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்டது. மொத்தம் ரூ.57 ஆயிரம் சாக்கடையில் இருந்து மீட்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு துறை அதிகாரி பிரகால்ட் சிதோலேவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்சப் பணத்தை கழிவறை கோப்பைக்குள் போட்டு தப்ப முயன்ற அதிகாரியை சாக்கடையை தோண்டி பணத்தை மீட்டு கையும் களவுமாக கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago