Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 மே 08 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாய்களால் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்ததையடுத்து, இந்தியாவில் ரொட்வைலர் இனத்தோடு சேர்த்து, 23 வகையான நாய் இனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, PITBULL, ROTTWEILER, TERRIER, MASTIFFS, AMERICAN BULLDOG, SOUTH RUSSIAN SHEPHERD DOG உள்ளிட்ட 23 வகையான நாய்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய விலங்குகள் நலத்துறை, அனைத்து மாநில அரசுகளுக்கும் எழுதிய கடிதத்தில், தடை செய்யப்பட்ட நாய் இனங்களை வளர்க்கவோ, விற்கவோ உரிமம் தரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீடுகளில் வளர்க்கப்படும் இந்த நாய்களுக்கு கருத்தடை செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதோடு, நாய்கள் மற்றும் மனிதர்களை பாதுகாக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் பீட்டா இந்தியா அமைப்பு, மனு தாக்கல் செய்தது.
இதுதொடர்பாக அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் முறையான குழு அமைக்கப்படாததால் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் இந்த உத்தரவுக்கு தடை பெறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
47 minute ago
1 hours ago