2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ராட்சத பேனர் விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

Editorial   / 2024 மே 14 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பையில் புழுதிப் புயலால் விளம்பர பலகை சரிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

காட்கோபர் என்ற இடத்தில் பலத்த காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் விளம்பர பலகை சரிந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.

விளம்பர பலகை சரிந்து விழுந்ததில் 70 பேர் காயம் அடைந்ததாக மும்பை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 100 அடி உயரம் கொண்ட ராட்சத விளம்பர பலகை இரும்பு சாரங்களுடன் விழுந்ததால் அருகில் இருந்த வீடுகள் சேதமாகியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .