2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

முதல்வர் ஸ்டாலினுக்கு கமல் நன்றி

Freelancer   / 2024 செப்டெம்பர் 26 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

'எஸ்.பி.பி., பெயரை சென்னையில் அவர் வாழ்ந்த தெருவுக்கு முதல்வர் சூட்டி அறிவித்திருக்கிறார். முதல்வர் ஸ்டாலினுக்கு என் பாராட்டுகளும் நன்றியறிதல்களும் உரித்தாகட்டும்” என மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்தார்.

பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவர், பல்வேறு மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். திரைப்படங்களில் நடித்துள்ளார். மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் விருதுகளைப் பெற்றுள்ளார்.

தமிழ் திரையுலகுக்கு எஸ்.பி.பி., ஆற்றிய சேவையை போற்றும் வகையில், அவரது புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், அவர் வீடு அமைந்துள்ள, நுங்கம்பாக்கம் காம்தார்நகர் பிரதான சாலைக்கு, 'எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை' என்று பெயரிடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், எக்ஸ் சமூகவலைதளத்தில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், “ஒப்பற்ற இசைக் கலைஞரும் எனது மூத்த சகோதரருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரை, சென்னையில் அவர் வாழ்ந்த தெருவிற்கு முதல்வர் ஸ்டாலின் சூட்டி அறிவித்திருக்கிறார்.

இலட்சக்கணக்கான கலை ஆர்வலர்களின் மனதில் இன்றும் வாழும் ஒரு பெரும் கலைஞனுக்குச் செய்யப்பட்டு இருக்கும் மரியாதை இது. பாலு அண்ணாவின் இரசிகர் கூட்டத்தில் ஒருவனாக என் பாராட்டுகளும் நன்றியறிதல்களும் முதல்வர் ஸ்டாலினுக்கு உரித்தாகட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X