2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மீண்டும் சட்டவிரோத தாய்ப்பால் விற்பனை

Freelancer   / 2024 ஜூன் 03 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மாதவரத்தைத் தொடர்ந்து சென்னை அரும்பாக்கத்திலும் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்யப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சத்தீஸ்குமார் தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இங்கு சட்டவிரோதமாக பதப்படுத்தப்பட்ட தாய்ப்பால்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது அம்பலமாகியுள்ளது. மேலும், 50 மிகி எடையுள்ள தாய்ப்பாலின் விலை ரூ 500க்கு விற்பனை ஆகிறது என்பதும் தெரியவந்துள்ளது.

முன்னதாக போத்தல்களின் மூலம் தாய்ப்பால் பெறப்பட்ட நிலையில், தற்போது பவுடர் வடிவில் கைப்பற்றப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பவுடரை குளிர்ச்சியாக்கி அதனை விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில், கைப்பற்றப்பட்ட இந்த தாய்ப்பால் பவுடர்கள் கிங் இன்ஸ்ட்டியூட்டில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக ஆய்வு செய்தபோது தாய்ப்பால்கள் போத்தல்களில் அடைக்கப்பட்டு விற்கப்படுவது தெரிந்த நிலையில், தற்போது பவுடர் வடிவில் கிடைத்திருப்பதும் அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக இயங்குவதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தாய்ப்பால் விற்பனையை தடுக்க சென்னையில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .