Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 மே 10 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
10ஆம் வகுப்புப் பொதுப் பரீட்சையில் சித்திபெற்ற பெற்ற மாணவர்களை, நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் விரைவில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுப் பரீட்சை, ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி நிறைவடைந்தது. 4,107 மையங்களில் 9,08,000 மாணவ-மாணவிகள் 10ஆம் வகுப்பு பொதுப் பரீட்சை எழுதி, முடிவுக்காக காத்திருந்த நிலையில், தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், “தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள். விரைவில் நாம் சந்திப்போம்!” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த வருடம் ஜூன் மாதம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பரீட்சைகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த 234 தொகுதி மாணவர்களுக்கு நடிகர் விஜய் பாராட்டுச் சான்றிதழ்களும், உதவித்தொகையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago