2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மாணவர்களின் உணவில் பல்லி

Freelancer   / 2024 ஜூலை 25 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தர்மபுரி மாவட்டம், தேவரசம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பாடசாலையில் பல்லி கிடந்த உணவை மாணவர்கள் சாப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பாடசாலையில் காலை உணவு சமைத்து வழங்கப்பட்ட பிறகு, அந்த பாத்திரத்தில் பல்லி இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது

பல்லி இறந்தது கண்டுபிக்கப்படுவதற்குள் 19 மாணவ, மாணவிகள் சாப்பிட்டு விட்டதால், அரசு மருத்துவ குழுவினர் நேரில் வந்து, பல்லி கிடந்த உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த தகவல், பெற்றோருக்குத் தெரிந்து அவர்கள் பாடசாலையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

இதுவரை வெளியான தகவல் படி பல்லி கிடந்த உணவை  சாப்பிட்ட மாணவ மாணவிகளுக்கு எந்தவித பிரச்சினையும் வரவில்லை என்றும் ஆனால் பெற்றோர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்றும்,  உணவு சமைத்தவர்கள் மேற்பார்வையாளர்கள் ஆகியவர்களிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் விசாரணை முடிவில் தான் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .