2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

மருந்து நிறுவனத்தில் நச்சு வாயு கசிவு; ஒருவர் பலி

Freelancer   / 2024 நவம்பர் 28 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திர பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டம், பரவடா பகுதியில் உள்ள தனியார் மருந்து நிறுவனம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட நச்சு வாயு கசிவால், ஒருவர் உயிரிழந்ததுடன், 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு ஆந்திர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டி வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆந்திர பிரதேச முன்னாள் அமைச்சர்  குடிவடா அமர்நாத் பாதிக்கப்படோரை நேரில் சந்தித்ததுடன், “இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன என கூறினார்.

“தீவிர கவனத்தில் கொண்டு, நிறுவனங்களுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என அவர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .