Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 12 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மணிப்பூரில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூர் - ஜிரிபாம் மாவட்டத்தில், திங்கட்கிழமை (11), பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 11 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த குகி-ஜோ கவுன்சில், செவ்வாய்க்கிழமை (12) அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது. இதையடுத்து, கடைகள் அடைக்கப்பட்டு மாநிலத்தின் பல பகுதிகளிலும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதனிடையே 11 பேர் கொல்லப்பட்டதற்கு எதிராக, திங்கட்கிழமை (11) மாலை, இம்பால் மேற்கு மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டங்களில் பல்வேறு கிராமங்களில் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இம்பால் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் மோதலில் ஈடுபடும் இரு தரப்பிலிருந்தும் ஆயுதம் ஏந்திய குழுக்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், கலவரம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களை கண்டறியும் பணிகளையும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய என்கவுன்ட்டரில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் காயமடைந்தனர்.
இது குறித்து கூறிய பொலிஸார், “ஜிரிபாம் காவல் நிலையத்துக்கு அருகே அகதிகள் முகாம் உள்ளது. காவல் நிலையம் மற்றும் அகதிகள் முகாமை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதல் முறியடிக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 3 நாட்களில் ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.” என தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
38 minute ago
41 minute ago
53 minute ago