2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

மாணவனை திருமணம் செய்த பேராசிரியருக்கு சிக்கல்

Freelancer   / 2025 பெப்ரவரி 06 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கு வங்க மாநில பல்கலைக்கழகத்தில் வகுப்பறையில் முதலாமாண்டு மாணவர் ஒருவரை பேராசிரியர் திருமணம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

இதையடுத்து பேராசிரியை தனது பணியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவி்த்துள்ளார்.

கொல்கத்தாவில், மாநில அரசுக்கு சொந்தமான மவுலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (எம்ஏகேஏயுடி), அப்ளைடு சைக்காலஜி துறையின் தலைவராக குறித்த பெண் பேராசிரியை பணியாற்றுகின்றார். 

இவர் தனது துறையின் முதலாமாண்டு மாணவரை வகுப்பறையிலேயே வைத்து இந்து பெங்காலி முறைப்படி திருமணம் செய்வது போன்ற வீடியோ கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி வெளியானது. 

 மாணவரை மூத்த பெண் பேராசிரியை பல்கலை வகுப்பறையில் வைத்தே திருமணம் செய்ததால் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால், அது ஒரு மனோதத்துவ நாடகத்துக்காக போலியாக அரங்கேற்றப்பட்ட திருமணம் என்று பேராசிரியை விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், பல்வேறு தரப்பிலும் நெருக்கடி முற்றியதையடுத்து தனது பேராசிரியை பணியை இராஜினாமா செய்யவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .