2025 ஜனவரி 29, புதன்கிழமை

மாணவிகளின் தலைமுடியை வெட்டிய அதிபர் பணியிடை நீக்கம்

Freelancer   / 2024 நவம்பர் 20 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திராவின் அல்லூரி சீதாராமா ராஜூ மாவட்டம், ஜி மதுலா பகுதியில், மாணவிகளின் தலைமுடியை வெட்டிய அதிபர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

“ கஸ்தூர்பா காந்தி” என்ற பெயரில் அரசு பெண்கள் பாடசாலையில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,  பாடசாலைக்கு தாமதமாக வந்த 18 மாணவிகளின் தலைமுடியை பாடசாலை அதிபர் சாய் பிரசன்னா என்பவர் கத்தரி கொண்டு வெட்டியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ காட்சி வைரலான நிலையில், கல்வித்துறை அதிகாரி நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். 

பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் நடத்திய தீவிர விசாரணையில், தலைமுடியை கத்தரித்தது உண்மை என்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிபர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .