Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 05 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கும்பமேளாவில் மூத்த குடிமக்கள் பங்கேற்பதற்காக அம்மாநில அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
“தேசிய மெடிகோஸ் கூட்டமைப்பு மற்றும் அலிம்கோ ஆகியற்றுடன் உத்தர பிரதேச அரசின் சமூக நலத்துறை இணைந்து மூத்த குடிமக்களுக்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
“பல்வேறு முதியோர் இல்லங்களில் இருந்து வருபவர்களுக்காக 100 படுக்கைகள் கொண்ட ஆசிரமம் கும்பமேளா பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பக்தி வழிபாடு நடத்துவது உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு உதவி செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
“மேலும், செவித்திறன் குறைபாடு உடைய மூத்த குடிமக்களுக்கு சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், இலவசமாக பரிசோதனை செய்யப்படுவதுடன், தேவையானவர்களுக்கு கருவிகள் வாங்கவும் உதவியும் செய்யப்படும்.
“இதுவரை, லக்னோ, சீதாபூர், ஹர்டோய், கவுசாம்பி, படோனி, சித்தார்த்நகர், கொண்டா, மிர்சாபூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த 500-க்கும் மேற்பட்ட மூத்தகுடிமக்கள் மகா கும்பமோவில் பங்கேற்றுள்ளனர்.
“பெப்ரவரி 26ஆம் திகதி நடைபெறும் அம்ரித் புனித நீராடல் நிகழ்வில் 2,000 மூத்த குடிமக்களை பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன” என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago