Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 13 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெலுங்கானா மாநிலம், துடியாலா அடுத்த லகசர்லா பகுதியில், செவ்வாய்க்கிழமை (12), கலெக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில், 1,350 ஏக்கர் பரப்பளவு காணியில், சிப்காட் மருந்து நிறுவனம் அமைக்க, அரசாங்கம் முடிவு செய்தது. இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்காக நிலம் கையகப்படுத்த கலெக்டர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினர். அப்போது கிராம மக்கள் கலெக்டர் மற்றும் அதிகாரிகளை தாக்கி ஓட ஓட விரட்டியுள்ளனர். மேலும், அவர்களது வாகனங்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதல் நடத்திய கிராம மக்கள் 16 பேரை பொலிஸார் கைது செய்தனர். மேலும் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில், விகாரபாத் கோடங்கல் முன்னாள் எம்.எல்.ஏ. நரேந்திர ரெட்டி, இன்று (13) காலை கே.பி. ஆர் பூங்காவில் நடைபயிற்சி சென்றபோது, அங்கு வந்த பொலிஸார் கலெக்டர் மீது தாக்குதல் நடத்த தூண்டிய குற்றச்சாட்டில், நரேந்திர ரெட்டியை கைது செய்தனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago