2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒலிபெருக்கி, பட்டாசுக்கு தடை

Freelancer   / 2024 டிசெம்பர் 23 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூருவில்,  புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒலிபெருக்கி, பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம்,  பெங்களூரு நகரில், ஆண்டுதோறும் ஜனவரி 1ஆம் திகதி எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, இந்திராநகர் ஆகிய இடங்களில் புத்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

இந்த நிலையில், 2025 புத்தாண்டை வரவேற்க பெங்களூரு மக்கள் ஆர்வமாக உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பெங்களூரு மாநகராட்சி, பொலிஸார் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளனர். 

புத்தாண்டு கொண்டாட்டத்தின் முக்கிய இடங்களான எம்.ஜி.ரோடு மற்றும் பிரிகேட் ரோட்டில் கண்காணிப்பு கேமராக்களை அதிகரிக்க மாநகராட்சிக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

 

பொலிஸார் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு:-

* புத்தாண்டு கொண்டாட்டத்தை அதிகாலை 1 மணிக்குள் முடித்துவிட வேண்டும்.

* எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, இந்திரா நகர் ஆகிய இடங்களில் மட்டும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி.

* முக்கியமான மேம்பாலங்கள் இரவு 10 மணிக்கு மேல் மூடப்படும்.

* எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோட்டில் 800 கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்படும்.

* எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோட்டில் இரவு 8 மணிக்கு மேல் வாகன போக்குவரத்து நிறுத்தப்படும்.

* புத்தாண்டு கொண்டாட வாகனங்களில் வருபவர்களுக்கு தனி வாகன நிறுத்தம்.

* பெண்களின் பாதுகாப்புக்காக பெண் போலீசார் நியமனம்.

* அதிகாலை 1 மணிக்கு பிறகு மதுபான விடுதிகள், கேளிக்கை விடுதிகளை மூட வேண்டும்.

* பெங்களூருவில் மற்ற பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி கட்டாயம்.

* புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒலிபெருக்கி, பட்டாசு வெடிக்க தடை

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .