2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

புத்தகப் பையில் துப்பாக்கி; மாணவனால் அதிர்ச்சி

Freelancer   / 2024 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி புத்தகப்பையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு பாடசாலைக்கு மாணவன் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுபற்றி மேலும் தெரியவருகையில், புதுடெல்லியில் நஜப்கர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில், நேற்று வழக்கம் போல் மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தந்துகொண்டிருந்த போது, ஒரு மாணவனின் செய்கைகள் மட்டுமே வித்தியாசமாக இருப்பதை பாடசாலை நிர்வாகத்தினர் கண்டு குழப்பம் அடைந்தனர்.

என்னவாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே மாணவன் கொண்டு வந்த பையை சோதனையிட்ட போது, வழக்கமாக இருக்க வேண்டிய புத்தகங்களுக்கு பதில் அதனுள் கைத்துப்பாக்கி இருப்பது கண்டு மிரண்டு போயினர்.

உடனடியாக இது குறித்து நிர்வாகத்தினர் உள்ளூர் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் விரைந்து வந்தனர்.

பாடசாலைக்குள் நுழைந்த பொலிஸார், அந்த கைத்துப்பாக்கியை வாங்கி பரிசோதித்து பார்த்தனர். அந்த துப்பாக்கி மாணவனின் தந்தைக்குச் சொந்தமானது, அவரது பெயரில் உரிமம் வாங்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு மாணவன் தந்தை காலமாகிவிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, துப்பாக்கியை பறிமுதல் செய்த பொலிஸார் உடனடியாக அதற்கான உரிமத்தை இரத்து செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற பாடசாலை, மாணவன் பெயர் மற்றும் துப்பாக்கி உரிமம் வைத்துள்ள மாணவன் தந்தை பெயர் உள்ளிட்ட விவரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .