Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 08 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
“புதுடெல்லி சட்டப்பேரவைக்கு, ஒரே கட்டமாக, பெப்ரவரி 5ஆம் திகதி தேர்தல் நடைபெறும்” என, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு, உத்தர பிரதேசத்தின் மில்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கும் அதே நாளில்தான் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
பெப்ரவரி 8ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், டெல்லியில், செவ்வாய்க்கிழமை (7) செய்தியாளர்களிடம் கூறியதாவது,
“டெல்லி சட்டப்பேரவைக்கு மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பெப்ரவரி 5ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 10ஆம் திகதி தொடங்கவுள்ளது.
“வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி திகதி ஜனவரி 17 ஆகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜனவரி 18ஆம் திகதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி திகதி ஜனவரி 20 ஆகும். இதில் பதிவான வாக்குகள் பெப்ரவரி 8ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
“மேலும், டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 1.55 கோடி பேர் வாக்களிக்கவுள்ளனர்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago
2 hours ago