Freelancer / 2024 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரபல நடிகையும், பாரதிய ஜனாதா கட்சியின் எம்.பி.யுமான கங்கனா ரனாவத்துக்கு கொலை மிரட்டல் விடும் வகையில் பயங்கரவாதிகள் காணொளி வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பொலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் மண்டி தொகுதி பா.ஜ., எம்.பி.யாக இருக்கிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் அவருக்கு தற்போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
அவர் தயாரித்து இயக்கியுள்ள எமர்ஜென்சி என்ற படமே இதற்கு காரணம். படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி கால சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
வரும் 6ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்துக்கு ரித்தேஷ் ஷா திரைக்கதை, வசனம் எழுத, ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில் படம் வெளியாகும் நாள் நெருங்கும் சூழலில் கங்கனாவுக்கு மிரட்டல் விடுத்து சிலர் பேசும் காணொளி வெளியாகி பரபரப்பை கூட்டி இருக்கிறது. அதில் அவர்கள் கூறி உள்ளதாவது:
“வரலாற்றை மாற்றவே முடியாது. சீக்கியர்களை தீவிரவாதிகளாக சித்திரித்து காட்டினால் நீங்கள் (கங்கனா ரனாவத்) யாரை பற்றி படம் எடுக்கிறீர்களோ அவருக்கு என்ன நடந்தது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எங்களை நோக்கி நீட்டப்படும் கைவிரல்களை எப்படி உடைப்பது என்று தெரியும்.
ஏற்கனவே நீங்கள் அறை வாங்கி இருக்கிறீர்கள். எங்களின் தலைகளை தியாகம் செய்ய துணியும் எங்களுக்கு அதை எடுக்கவும் தெரியும்” என்று மிரட்டலாக பேசி உள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த காணொளியை, பலரும் தங்களின் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
அதேநேரத்தில் கங்கனா ரனாவத்தும் இதே வீடியோவை தமது எக்ஸ் வலை தளத்தில் பகிர்ந்துள்ளார்.S
25 minute ago
37 minute ago
42 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
37 minute ago
42 minute ago
50 minute ago