Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 11 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுபோதையில் தாக்கியதாக பிரபல பின்னணி பாடகர் மனோ மகன் மீது பொலிஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த 20 வயதான கிருபாகரன், நிதிஷ் ஆகிய இருவரும், வளசரவாக்கம் அருகில் உள்ள உணவகத்திற்கு சென்று வரும் வழியில், அங்கு நின்றுகொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பல் அவர்கள் இருவரிடமும் தகராறில் ஈடுபட்டு இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்துள்ளது.
இதில் கிருபாகரனின் பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பல் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து வளசரவாக்கம் பொலிஸார் சம்பவ இடம் விரைந்து கிருபாகரன் மற்றும் நிதிஷ் ஆகிய இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து விபரங்களை சேகரித்தனர்.
விசாரணையில், தாக்குதல் நடத்தியது பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன் உள்ளிட்ட 5 பேர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago