2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

பேஸ்புக் மூலம் பணம் பறித்தவர் கைது

Freelancer   / 2024 மே 15 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பேஸ்புக் மூலம் 7.5 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வடமாநிலத்தைச் சேர்ந்த சந்தேக நபரை, பொலிஸார் கைது செய்தனர்.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது, சென்னை மாங்காட்டைச் சேர்ந்தவர் மனோரஞ்சன் குமார். இவர், மத்திய சுங்கவரி மற்றும் கலால் வாரியத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இவர், கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் திகதி, தனது முகநூல் பக்கத்தை பயன்படுத்திக்கொண்டிருந்த போது அதில், வர்த்தக விளம்பரம் ஒன்று வந்துள்ளது.

இதையடுத்து அதில் கொடுக்கப்பட்ட லிங்கை தட்டிய அவர், ‘ஆசிஷ் சஹாஸ் டால் ஸ்ட்ரீட் ட்ரேடிங் சாம்பியன்ஸ் விஐபி 2’ என்ற வாட்ஸ் அப் குழுவில் இணைந்துள்ளார்.

அதன் பின்னர் 'செஸ் செஸ்' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதன் வழிகாட்டுதலின்படி பல்வேறு பங்குகளை வாங்க கூறியதையடுத்து, அடுத்தடுத்து பங்குகளை பெறுவதற்காக பல்வேறு வங்கிக் கணக்கு மூலம் பணம் செலுத்தியிருக்கிறார்.

இதில் அவர், கிட்டத்தட்ட 39 இலட்சம் ரூபாயை இழந்துள்ளார்.

இந்நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், இதுகுறித்து ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப் பிரிவில் புகாரளித்தார்.

இதையடுத்து இதனை விசாரணை செய்த சைபர் க்ரைம் பொலிஸார், மோசடி கும்பல் குஜராத் மாநிலத்தவர்கள் என்பதை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தின் பகுதியை சேர்ந்த பிரேம் ராம் என்பவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 44 நபர்களி;டம், இதே முறையில் 7.5 கோடி வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து சந்தேக நபரை கைது செய்து, சென்னை அழைத்து வந்த பொலிஸார், அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் சிலரை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .