2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பலாத்காரத்துக்கு எதிராக ரயில் நிலையம் முற்றுகை

Freelancer   / 2024 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாராஷ்டிரா மாநிலம் பத்லாபூரில் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதை கண்டித்து, பொதுமக்கள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட நிலையில், அங்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தானே மாவட்டம் பத்லாபூரில் 2 சிறுமிகளுக்கு தூய்மைப் பணியாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள், பத்லாபூர் ரயில் நிலையம் சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தால் மும்பை மத்திய வழித்தடத்தில் ரயில் சேவை முடங்கியது. சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தூய்மைப் பணியாளர் அக்ஷய் ஷிண்டே கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, சிறுமிகள் பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக சிறப்பு குழு விசாரணைக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டார்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பத்லாபூர் ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .