2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

புறாவை வைத்து கொள்ளையடித்தவர் கைது

Freelancer   / 2024 ஒக்டோபர் 10 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடக மாநிலத்தில், புறாக்களை பயன்படுத்தி நூதனமுறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நகரத்பேட்டையைச் சேர்ந்த நபர்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

குறித்த நபர் ஒவ்வொரு முறை கொள்ளையடிக்கசெல்லும்போதும், புறாக்களை தன்னுடன் எடுத்துச் செல்வது வழக்கம். 

 

அப்போது, வீடுகளை நோட்டமிடும் குறித்த நபர் இலக்கை எட்டியவுடன் சம்பந்தப்பட்ட வீட்டின் மீது இரண்டுபுறாக்களை விடுவிப்பார்.

 

பறவைகள் பெரும்பாலும் கூரை அல்லது பால்கனிக்கு பறந்து,சிறிய கவனத்தை ஈர்க்கும். 

 

ஆர்வமுள்ள குடியிருப்பாளர்கள் புறாக்களை எதிர்கொண்டால், குறித்த நபர் அங்கு செல்வதில்லை. 

 

ஒருவேளை புறாவை யாரும் நெருங்கவில்லை எனில், வீட்டில் புகுந்து கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்

 

பூட்டிய வீட்டை அடையாளம் கண்டவுடன், குறித்த நபர் இரும்பு கம்பியை பயன்படுத்தி வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து  வந்துள்ளார்.

 

இவ்வாறு, நகரம் முழுவதும் குறைந்தது 50 கொள்ளைசம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .