2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

பிரேமலதா விஜயகாந்துக்காக தொகுதி தேடும் தேமுதிக

Freelancer   / 2024 டிசெம்பர் 04 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெப்டன் விஜயகாந்த் இல்லாத தாக்கம் தெரியாத அளவுக்கு தன்னால் முடிந்​தவரைக்கும் கட்சியை தூக்கி நிறுத்தும் வேலைகளில், தேமுதிக பொதுச்​செய​லாளர் பிரேமலதா விஜயகாந்த் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில், கட்சியின் பலத்தை பொறுத்து எங்கெல்லாம் சிறப்புக் கவனமெடுத்து வேட்பாளர்களை நிறுத்துவது என்பதற்கான கள ஆய்வு இப்போது தேமுதிக வட்டாரத்தில் நடந்துகொண்​டிருக்​கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய தென் மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் சிலர், “மக்களவைத் தேர்தலில் நூலிழையில் வெற்றி​வாய்ப்பை இழந்த விருதுநகர் மாவட்​டத்தில் அருப்​புக்​கோட்டை உட்பட 2 தொகுதி​களிலும் மதுரை​யில், மதுரை மத்தி உள்ளிட்ட 2 தொகுதி​களிலும் இம்முறை தேமுதிக போட்டி​யிடும். பிரேமலதாவை அருப்​புக்​கோட்​டையில் நிற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். 

“அங்கு இல்லா​விட்டால் அவர் மதுரை மத்திய தொகுதியில் போட்டி​யிடலாம்.

விஜய பிரபாகரன் சட்டமன்றத் தேர்தலுக்கு வரமாட்​டார். அவர் மீண்டும் மக்களவைத் தேர்தலில் அதே விருதுநகரில் தான் போட்டியிட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்​கிறார். 

“ ஜனவரியில் தேமுதிக பொதுக்குழு கூடுகிறது. அப்போது விஜய பிரபாகரனுக்கு மாநில இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்​படலாம். அதற்கு முன்னதாக, கேப்டன் மறைவு தினத்​தையொட்டி, டிசம்​பரில் சென்னையில் பிரம்​மாண்டமான அமைதிப் பேரணியை நடத்தவும் திட்ட​மிடப்​பட்​டுள்ளது” என்று கூறியுள்ளனர்.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .