2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பட்டத்தின் மாஞ்சால் நூலால் நால்வர் பலி

Freelancer   / 2025 ஜனவரி 15 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பட்டத்தின் மாஞ்சால் நூல் கழுத்தை அறுத்து 4 பேர் உயிரிழந்த சம்பவமொன்று, குஜராத்தில், செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.

தை முதல்நாள், வடமாநிலங்களில் மகர சங்கராந்தி, உத்தராயண் பண்டிகை என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. தை முதல்நாள், குஜராத்தில் உத்தராயண் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. 

இந்நாளில் மக்கள் வானில் பட்டம் விட்டு கொண்டாடுவது வழக்கம்.

இதனிடையே, உத்தராயண் பண்டிகையையொட்டி, குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வண்ணவண்ண பட்டமிட்டு மகிழ்ந்தனர்.

இந்நிலையில், குஜராத்தில்,செவ்வாய்க்கிழமை (14), உத்தராயண் பண்டிகையின்போது பட்டத்தின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து   4 பேர் உயிரிழந்துள்ளனர். 

அம்மாநிலத்தின் பஞ்ச்மகால் மாவட்டம், ஹலோல் நகரில்,  4 வயது சிறுவன் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது,  பட்டத்தின் மாஞ்சா நூல் சிறுவனின்  கழுத்தை அறுத்தது. இதில் அச்சிறுவன் உயிரிழந்தான்.

அதேபோல், மஹாசனா மாவட்டம் வட்பார் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் (வயது 35) மோட்டார் சைக்கிளில் தனது தோட்டத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது, பட்டத்தின் மாஞ்சா நூல் அவரின் கழுத்தை அறுத்தது. இதில் படுகாயமடைந்த மன்சாஜி அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .