2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

நீர் தேடிவந்து கிணற்றில் விழுந்த 13 காட்டுப்பன்றிகள்

Freelancer   / 2025 ஜனவரி 12 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருப்பத்தூர் மாவட்டம், சின்ன சமுத்திரம் அருகே காப்புக் காட்டில் இருந்து தண்ணீர் தேடி விவசாய நிலத்துக்குள் புகுந்த 13 காட்டுப்பன்றிகள், அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்தன. 

இதையடுத்து, இது குறித்து அப்பகுதி மக்கள், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், வலைகள் மற்றும் கயிறுகள் மூலம் கிணற்றுக்குள் இருந்து அனைத்து காட்டுப்பன்றிகளையும் பத்திரமாக மீட்டனர். 

பின்னர் அந்த காட்டுப்பன்றிகளை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X