Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2024 ஜூலை 16 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.பி.குளம் பகுதியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் வடக்கு தொகுதி துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் வல்லபாய் சாலை பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கொலை தொடர்பாக மதுரை தல்லாகுளம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகியாக இருக்கிறார். மேலும் மதுரை வடக்கு தொகுதி துணை செயலாளராகவும் அவர் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் வல்லபாய் சாலையில் பாலசுப்ரமணியன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை சூழ்ந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டினர்.
இரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சிறிது நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். அதிகாலையில் நடைபெற்ற இக்கொலை சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த தல்லாகுளம் பொலிஸார் பாலசுப்ரமணியனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர், அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
2 hours ago