Freelancer / 2024 ஜூலை 02 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, 6.5 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள அதேசமயம், இதுவரை கனமழையால் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக, வடகிழக்கு மாநிலமான அசாமில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இடைவிடாத மழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 6.5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய விமானப்படை இதுவரை வெள்ளத்தில் சிக்கிய, 13 பேரை மீட்டுள்ளது. பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை நதிகள் உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேலும், திப்ருகர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கி தவித்த மக்களை மீட்பு படையினர் மீட்டனர்.S
7 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
59 minute ago
2 hours ago