Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 22 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெங்களூரில், பெண்ணின் உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரின் வயலிக்காவல் பகுதியில் உள்ள வீட்டில், 2 நாட்களாக மிகவும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர், அவ்வீட்டில் தங்கியிருந்த மகாலட்சுமியின் தாயாருக்கு தெரிவித்துள்ளனர்.
பின்னர் பெண்ணின் தாயாரும், சகோதரியும் அங்கு வந்துள்ளனர். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, மகாலட்சுமியின் உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டு, பிரிட்ஜில் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
30 துண்டுகளாக உடல் வெட்டப்பட்டிருந்த நிலையில், அதில் புழுக்களும் இருந்துள்ளன. சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்ட கூடுதல் பொலிஸ் ஆணையர், 10 நாட்களுக்கு முன்னர் கொலை நடந்திருக்கலாம் என தெரிவித்தார். மகாலட்சுமி, கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்ததாகவும், கொலையாளியை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு டெல்லியில், ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணின் உடல் 35 துண்டுகளாக வெட்டப்பட்டு, பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்தது நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் அப்பெண்ணின் காதலன் கைது செய்யப்பட்டார். தற்போது அதேபோன்றொரு கொடூரம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
3 hours ago