2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

திருவண்ணாமலையில் மண்சரிவு

Freelancer   / 2024 டிசெம்பர் 02 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால், 7 பேர் சிக்குண்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், பெஞ்ஜல் புயல் காரணமாக அடைமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலை உச்சியில் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து பாறை ஒன்று உருண்டு வந்து, வ உ சி. நகர் தெருவில் உள்ள வீடுகளின் மீது விழுந்தது. 

இதில் இரண்டு வீடுகளில் இருந்த 7 பேர் சிக்கியுள்ளனர்.  2 ஆண்கள், ஒரு பெண் மற்றும் 5 குழந்தைகள் இதில் உள்ளடங்குவர்.

 சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர்,  மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் 80க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இந்த மண் சரிவால்  ஒரு வீடு முற்றாக சேதமடைந்து புதையுண்டுள்ளது.

 அந்தப் பகுதியில் மேல் இருக்கும் பாறையானது எந்த நேரத்திலும் உருண்டு வரும் அபாயம் உள்ளது. 

 இந்நிலையில், திருவண்ணாமலை வ.உ.சி. நகரில் மேலும் ஓரு இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

 மேலும் ஒரு இடத்தில், மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகிலேயே மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே இடிந்த வீடுகளில் உள்ளே எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது குறித்து முழு விவரங்கள் பாறையை அகற்றிய பிறகு தான் தெரியவரும் என்று தெரிவிக்கப்படுகின்றது..

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X