Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2024 மே 26 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமண விழா அடிதடியில் முடிந்த கதை பெரும் பரபரப்பை உத்திர பிரதேச மாநிலம் ஹாபூரில், ஏற்படுத்தியுள்ளது. அதற்கு மணமகனின் ஒரு செயல் தான் காரணம். அப்படி என்ன தப்பு என கேட்கிறீர்களா.
அவர் மிக பெரிய தவறு ஒன்றை செய்துவிட்டார். வேறொன்றுமில்லை மணமகளுக்கு முத்தம் கொடுத்து விட்டார். இதற்காக மணமகள் தரப்பிலிருந்து வந்தவர்கள் மாப்பிள்ளையை அடிதத்தோடு மட்டுமின்றி திருமணத்திற்கு வந்திருந்த மணமகன் தரப்பினரையும் அடித்து உதைத்தனர்.
உத்திர பிரதேசத்தின் (Uttar Pradesh) ஹாபூர் டெஹாட் பகுதியில் உள்ள அசோக்நகரில் திருமண விழா நடந்து கொண்டிருந்தபோது, மாலை மாற்றிக் கொள்ளும் சடங்கின் போது, மணமகன் மணமகளை மேடையில் அனைவரும் முன்னிலையில் முத்தமிட்டார். மணமகனின் இந்த செயல் மணமகள் தரப்பு மக்களை ஆத்திரமடைய செய்தது. மணமகன் உட்பட திருமணத்திற்கு வந்தவர்களை அடிக்க ஆரம்பித்தனர்.
சிறிது நேரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. இதனால் ஆத்திரமடைந்த மணமகன் தரப்பும் மணமகள் தரப்பையும் தாக்கியுள்ளனர். அடிதடி நிலைமைக்கு சென்று விட்டது கட்டைகள், கம்பிகள் மற்றும் கம்புகளால் தாக்கினர். கற்களை வீசியும் தாக்கினர். மணமகன் தரப்பினர் மறுபுறம் மணமகள் தரப்பினர் மீது கற்களை வீசத் தொடங்கினர். இதனால், இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் திருமண ஊர்வலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .