2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: மனுவை விசாரிக்க மறுப்பு

Freelancer   / 2025 பெப்ரவரி 03 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி தாக்கலான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சினை நிலவி வருகிறது. இப்பிரச்சினை தொடர்பாக இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்து அமைப்பினர் மற்றும் ஆதரவு அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோயில் 16 கல் மண்டபம் முன்பு நாளை (4) ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு பொலிஸார் அனுமதி மறுத்தது.

இப்பிரச்சினை காரணமாக இருதரபினர் இடையே அசாதாரண சூழல் நிலவும் காரணத்தால் மதுரை மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டம், தர்ணா உள்ளிட்ட அனைத்திற்கும் தடை விதிக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் நாளை (4) இந்து முன்னணி நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கக்கோரி நீதிபதி தனபால் முன்பு இன்று அவசர முறையீடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதி, இதனை அவசர வழக்காக விசாரிக்க முடியாது. வழக்கறிஞர் மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறினார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .