Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Freelancer / 2025 மார்ச் 04 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருப்பதி ஏழுமலையான் கோவில் மீது விமானங்கள் பறக்க தடை விதிப்பது குறித்து கலந்துபேசி முடிவு எடுக்கப்படும் என்று, மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரதிநிதிகள் என விவிஐபி.க்களும் வருவதால், அவர்களின் பாதுகாப்பு கருதி கோவில் மீது விமானங்களோ அல்லது ஹெலிகாப்டர்களோ பறக்க தடை விதிக்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறுகையில்,
“இந்த கோரிக்கை தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து துறைக்கு தேவஸ்தானம் பலமுறை கடிதம் எழுதியுள்ளது. மேலும் பலரும் இது தொடர்பாக பேசி உள்ளனர். ஆதலால், இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கலந்துபேசி முடிவு எடுக்கப்படும்" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago