2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

திருப்பதியில் அதிரடி உத்தரவு

Editorial   / 2024 ஜூலை 11 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

புண்ணிய வைணவ திருத்தலமாக விளங்கும் திருப்பதி நகரில் கோவிந்தராஜர், கோதண்டராமர், கபிலேஸ்வரர், பத்மாவதி தாயார் ஆகிய புகழ்பெற்ற கோயில்கள் உள்ளன. மேலும், திருமலைக்கு செல்லும் பக்தர்கள் திருப்பதி வழியாகத்தான் திருமலைக்கு செல்ல வேண்டியுள்ளது.

இதனால், ஏற்கெனவே சுற்றுச்சூழலை பாதுகாக்க திருப்பதி மற்றும் திருமலையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கவோ, பயன்படுத்தவோ முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள் கூட திருமலையில் தடை செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், திருமலைக்கு குட்கா, சிகரெட், பீடி, பான் மசாலா, மதுபான போத்தல்கள், மாமிசம் போன்றவையும், துப்பாக்கி, கத்தி போன்றவ ஆயுதங்களும் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்தகட்டமாக தற்போது திருப்பதி நகரில் பொது இடங்களில் சிகரெட், பீடி போன்றவை புகைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி அருகே 100 மீட்டருக்குள் உள்ளகடைகளில் பீடி, சிகரெட், பான்மசாலா, குட்கா போன்றவை விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .