2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

திரிபுராவில் வெள்ளம், நிலச்சரிவால் 10 பேர் பலி

Freelancer   / 2024 ஓகஸ்ட் 22 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

திரிபுராவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால், 10 பேர் உயிரிழந்தனர். 32 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திரிபுராவில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பல்வேறு இடங்களில் சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அதிக மழை பெய்து வருவதால், அனைத்து முக்கிய ஆறுகளிலும் நீர்மட்டம் ஏற்கனவே அபாயக் கட்டத்தை தாண்டியுள்ளது. தெற்கு திரிபுரா மாவட்டத்தின் தேவிபூர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை தீவிரப்படுத்துமாறு, மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல்வர் மாணிக் சாஹா உத்தரவிட்டுள்ளார்.

இதுவரை நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால், 10 பேர் உயிரிழந்தனர். 330 நிவாரண முகாம்களில் 32 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்தனர்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .