2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

தலையில் விழுந்த நாயால் சிறுமி உயிரிழப்பு

Freelancer   / 2024 ஓகஸ்ட் 08 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 5ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த நாய், சாலையில் நடந்து சென்ற சிறுமி தலையில் விழுந்ததில், சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

மஹாராஷ்டிரா, மும்பையில் உள்ள மும்ப்ரா பகுதியில் சாலையில் தாயுடன் 3 வயது சிறுமி சென்று கொண்டிருந்தார். அப்போது 5வது மாடியில் இருந்து, சிறுமியின் தலையில், திடீரென நாய் ஒன்று விழுந்ததில் அந்த சிறுமி மயக்கம் அடைந்தார்.

தாய், கதறியபடி சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக கூறினர்.

இதற்கிடையே சிறுமி மீது விழுந்த நாய், அருகே இருந்த கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிறுமியின் தலையில் நாய் விழும் போது, அருகில் இருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. நாய் தவறுதலாக விழுந்ததா, அல்லது வேண்டுமென்றே தூக்கி எறியப்பட்டதா, என்பது குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .