2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

தமிழகத்துக்கு மஞ்சள் அறிவித்தல்

Freelancer   / 2024 ஒக்டோபர் 13 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தென்மேற்கு பருவகாற்று தென் மாநிலங்களில் விலகும்போது வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகும். இதன் காரணமாக தமிழகத்தில் மழை பொழிவு அதிகமாக இருக்கும்” என,  தமிழக வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளது.

ஒக்டோபர் மாதம் முதல் டிசெம்பர் இறுதி வரை இந்த பருவ காலம் நீடிக்கும். தற்போது அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக வலுவடைந்து வருகிறது. அதே நேரம் வங்கக் கடலில் அந்தமான் தீவுகளுக்கு தெற்கில் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாக வாய்ப்பும் உள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் நேற்று முதல் 18ஆம் திகதி வரை பரவலாக கன மழை பெய்யும் என்று தமிழக வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது. இந்த காலத்தில் 200 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து,  இந்தப் பகுதிகளுக்கு 'மஞ்சள் அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது. 
மேலும், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பேரிடர் மீட்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .