2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

தமிழகத்துக்கு சிவப்பு எச்சரிக்கை

Freelancer   / 2024 ஒக்டோபர் 15 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று வடதமிழக கடலோர பகுதியை நோக்கி அடுத்த 48 மணிநேரத்தில் நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

இதனால் புதன்கிழமை (16),  அடைமழை பெய்யக் கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடைமழை பெய்து வருகின்றது, இதை அடுத்து, சென்னை உள்பட நான்கு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை (15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி திங்கட்கிழமை (14), அதிகாலை 5.30 மணிக்கு உருவானது. இது இரண்டு நாள்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதி மற்றும் புதுச்சேரி நோக்கி நகரும்.

தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதுதவிர தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (புதன்கிழமை) அல்லது நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அந்த வகையில், 15 மாவட்டங்களில்  அடைமழை  பெய்யும். 

இதன்படி சென்னையில் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

மழை தொடர்பான புகார், மீட்பு பணிகளுக்கு 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

கட்டுப்பாட்டு அறையை 044-25619204, 2561 9206, 25619207 ஆகிய எண்களையும் மக்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்படுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .