2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

’ட்ரீட்’ தர மறுத்ததால் 16 வயது சிறுவன் கொடூரக் கொலை

Freelancer   / 2024 செப்டெம்பர் 25 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லியில், புதிதாக வாங்கிய கைபேசிக்கு, 'ட்ரீட்' தர மறுத்த சிறுவனை, அவனது நண்பர்கள் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி மேலும் தெரியவருகையில், கிழக்கு டெல்லி மாவட்டத்தில் உள்ள ஷகர்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த, சச்சின் என்ற 16 வயது சிறுவன், சமீபத்தில் புதிதாக மொபைல் போன் வாங்கியுள்ளான். இதற்கு ட்ரீட் தரும்படி அவனது நண்பர்கள் மூன்று பேர் கேட்டுள்ளனர்.

ஆனால், சச்சின் மறுத்ததால், சச்சினுக்கும், அவனது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியால், சச்சினை சரமாரியாக குத்தியதாகக் கூறப்படுகின்றது.

படுகாயமடைந்த சச்சினை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.

இந்நிலையில், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமரா காட்சிகளின் அடிப்படையில், சந்தேகநபர்களை பொலிஸார் கைது, வழக்குப் பதிவு செய்தனர்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .