2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ட்ரம்பின் முதல் உரையாடல் மோடியுடன்

Freelancer   / 2024 நவம்பர் 07 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகத் தலைவர்களில் பிரதமர் மோடியுடன் தான் எனது முதல் உரையாடல் அமைந்துவிட்டது என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்புடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “எனது நண்பர் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தேன். விண்வெளி, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்த, டிரம்புடன் இணைந்து பணிபுரிவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “உலகம் முழுவதும் பிரதமர் மோடியை விரும்புகிறது. இந்தியா மாபெரும் தேசம். பிரதமர் மோடி மகத்தான மனிதர். பிரதமர் மோடி, இந்தியாவை உண்மையான நண்பராகக் கருதுகிறேன்” என, ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

 



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .