2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

Freelancer   / 2024 ஜூலை 09 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர் விருதுநகர் உட்பட பல்வேறு இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. ஆலைகளில் கடந்த சில தினங்களாக தொடர் வெடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

அந்த வகையில் காளையார் குறிச்சியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று காலை முதல் வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது.

அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வெடி விபத்து நடந்த இடத்துக்கு பொலிஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்தனர்.

இந்த வெடி விபத்தில் ஒரு அறை தரைமட்டமான நிலையில், 2 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 2 பேர் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், பட்டாசு தயாரிக்கும் போது உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விபத்து குறித்து, வழக்குப்பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .