Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 23 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுவர் திருமணம் தொடர்பாக, அசாமில், ஒரே நாளில் 416 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2012, 2013ஆம் ஆண்டுகளில், அசாமில் சிறுவர் திருமணம் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது அந்த மாநிலத்தில் நடைபெறும் திருமணங்களில் சுமார் 35 சதவீதம் சிறுவர் திருமணம் என்பது தெரியவந்தது. குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கடந்த 2023ஆம் ஆண்டு, பெப்ரவரியில் சிறுவர் திருமண தடுப்பு நடவடிக்கையை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு தொடங்கியது. முதல்கட்ட நடவடிக்கையின்போது 3,483 பேர் கைது செய்யப்பட்டனர். 4,515 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபரில் இரண்டாம் கட்ட நடவடிக்கையை அசாம் அரசு தொடங்கியது. அப்போது 915 பேர் கைது செய்யப்பட்டனர். 710 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தற்போது 3ஆம் கட்டமாக சிறுவர் திருமண தடுப்பு நடவடிக்கையை அசாம் அரசு கடந்த 21ஆம் திகதி சனிக்கிழமை இரவு தொடங்கியது. இதில் 416 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், 335 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது
சிறுவர் திருமணம் தொடர்பாக அசாமில், இதுவரை 4,814 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago