2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

“சாப்பிட்டதற்கு பணமா கேட்கிறாய்?” காலணியால் அடிக்கப் பாய்ந்த பொலிஸ்

Freelancer   / 2024 செப்டெம்பர் 04 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளரை, காலணியை கழற்றி அடிக்கச் சென்ற பொலிஸ் குறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தெரியவருவதாவது, தர்மபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எதிரில் ஹோட்டல் ஒன்று உள்ளது. இங்கு, காவேரி எனும் பொலிஸ் எஸ்.எஸ்.ஐ ஒருவர் உணவு சாப்பிடுவது வழக்கம்.

அவ்வாறு சாப்பிடும் உணவிற்கு கையில் உள்ள பணத்தை கொடுத்து விட்டு, மீதியை பின்பு தருகிறேன் என கூறிவிட்டு சென்று விடுவாராம்.

இந்நிலையில், கடந்த 2ஆம் திகதி, அவர் சாப்பிட்ட உணவிற்கு பணம் கொடுக்காமல், அடுத்த நாள் சாப்பிட வரும் போது தருவதாக கூறியுள்ளார். அதேபோல் அடுத்த நாள் மாலை உணவு சாப்பிட வந்தபோது, முதல் நாள் சாப்பிட்ட உணவிற்கும் சேர்த்து பணம் கேட்கப்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த எஸ்.எஸ்.ஐ, ஹோட்டல் உரிமையாளரை தகாத வார்த்தைகளால் பேசியதோடு, தன் காலில் அணிந்திருந்த காலணியை கழற்றி, அவரை அடிக்க முயன்றுள்ளார். அதை அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தடுத்துள்ளனர்.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ள நிலையில், அவை தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதுகுறித்த புகாரின் பேரில் பொலிஸார், கடை உரிமையாளர் மற்றும் எஸ்.எஸ்.ஐ காவேரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .