Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஒக்டோபர் 14 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாபா சித்திக் கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுக்கொண்டதுடன், நடிகர் சல்மான் கானுக்கு உதவி செய்பவர்களுக்கு பகிரங்க மிரட்டலையிம் விடுத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் சித்திக், கடந்த சனிக்கிழமை (12) இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது படுகொலை சம்பவத்துக்கு பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது.
இது தொடர்பாக பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்புடைய ஷுபு லோங்கர் என்ற நபர், தனது முகநூல் பக்கத்தில் பகிரங்க அறிவிப்பை வெளியிட்டார்.
அந்த பதிவில், "இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு கொண்டிருந்தது. சல்மான் கானுடன் நெருக்கமாக இருந்த காரணத்தால் தான் சித்திக் கொல்லப்பட்டார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான பதிவில், "எங்களுக்கு யாருடனும் பகை இல்லை, ஆனால் சல்மான் கான் மற்றும் தாவூத் கும்பலுக்கு யார் உதவினாலும், உங்கள் கணக்குகளை முடிப்போம்," என்று லோங்கர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, மும்பை தெற்கில் உள்ள மலபார் ஹில் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .