Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2024 ஜூன் 06 , பி.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பையின் செம்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சமையல் எரிவாயு வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.
இந்த வெடிவிபத்தில் வீடு மற்றும் அருகில் இருந்த பலசரக்கு அங்காடி என்பவற்றுக்கு சேதம் ஏற்பட்ட நிலையில், குறித்த விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் உட்பட 10, உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 7:30 மணியளவில் பெண் ஒருவர் சமையல் எரிவாயு அடுப்பை பற்றவைக்க முயன்றபோது வெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்கனவே கசிந்து கொண்டிருந்த சமையால் எரிவாயு வெடித்த நிலையில், கடுமையான தீ பற்றிக்கொண்ட போதும், விரைவில் தீ அணைக்கப்பட்டது. இருந்தபோதும், அப்போது வீட்டிற்குள் இருந்த எட்டு பேர் மற்றும் வெளியே ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு சிறார்களும் மூன்று பெண்களும் அடங்குவர், அவர்கள் அனைவரும் விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும், நான்கு பேர் ஆழமான தீக்காயங்களுக்கு ஆளான நிலையில், மற்றவர்கள் இலேசான காயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர். மேலும் ஒருவர் மேல் சிகிச்சைக்காக சியோன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். காயமடைந்த அனைத்து தரப்பினரும் தற்போது சீரான நிலையில் உள்ளதாகவும், விபத்து குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago