2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சமய வைபவ நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

Freelancer   / 2024 ஓகஸ்ட் 12 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீஹார் மாநிலம் பாட்னாவில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த நிலையில், 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

பீஹார் மாநிலம் ஜெஹனாபாத் மாவட்டத்தில் பராவர் மலைப்பகுதியில் உள்ள பாபா சித்தேஸ்வரா நாத் கோயிலில் நேற்று (11) கும்பாபிஷேகம் நடைபெற்றது.

குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த சிவன் கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதம் நிகழும் இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்,

இந்நிலையில், நேற்றும் இந்த விழாவில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர். கட்டுக்கடங்காமல் வந்த கூட்டத்தால் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 30-க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஆண்டுதோறும் நிகழும் நிகழ்வு எனத் தெரிந்தும் உள்ளூர் நிர்வாகம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாததே உயிரிழப்பு நேர காரணம் என உயிரிழந்த நபரின் உறவினர் ஒருவர் ஊடகப் பேட்டியில் கூறினார்.

இவ்வளவு பெரிய கூட்டத்தை சமாளிக்க தேசிய சாரணர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அதிகளவில் பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் கூட்டத்தை சரியாக நிர்வகிக்கத் தவறிவிட்டனர் என்று விழாவில் கலந்து கொண்ட மேலும் சிலர் கூறினர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இந்தக் குற்றசாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .