2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

சபரி பக்தர்கள் குளிக்கத்தடை

Freelancer   / 2024 டிசெம்பர் 02 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெஞ்சல் புயலின் தாக்கத்தால் கேரளாவில் வருகிற 4ஆம் திகதி வரை அடைமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், சபரிமலை, பம்பை, நிலக்கல், எருமேலி ஆகிய பகுதிகளில், மழையுடனான வானிலை நிலவி வருகிறது.

இனி வரும் நாட்களில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சபரிமலை, பம்பை, எருமேலி ஆகிய இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் என்றும், 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பம்பை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் ஆறுகளில் இறங்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 சபரிமலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் அடைமழையால் பம்பை ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X