Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2024 ஜூன் 27 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரோட்டில் வீட்டில் 15 கிலோ சந்தனக்கட்டை பதுக்கிய முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அரசபுரம் கே.என். பாளையம் பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பங்களாபுதூர் பொலிஸார் அங்கு சென்று கட்டப்பெருமாள் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் 15 கிலோ எடை கொண்ட சந்தனக் கட்டை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து பெருமாளை பொலிஸார் கைது செய்து, சந்தனக்கட்டையுடன் அவரை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பெருமாளிடம் வனத்துறையினர் சந்தன மரம் எங்கு வெட்டப்பட்டது. எந்தெந்த பகுதியில் சந்தன மரங்கள் வெட்டப்படுகிறது. எங்கெல்லாம் சந்தன மரம் விற்பனை நடக்கிறது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago