Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2024 ஜூன் 19 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் சட்டவிரோத முறையிலான மதுபான விற்பனை செய்வது தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டபடுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் மதுபானம் விற்கப்பட்டதாகவும், அதனைப் பத்துக்கும் மேற்பட்டோர்கள் வாங்கி அருந்திய நிலையில், அவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் இதுவரை யாரும் அப்பகுதிக்கு வந்து விசாரணை செய்யவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்ற நிலையில், கண்ணுகுட்டி என்கிற கோவிந்தராஜ் என்பவர் மதுபானம் விற்பதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் வீடுகளில் பொலிஸார் விசாரணை நடத்திய அதேசமயம், மது அருந்திய 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த 4 பேரும் மது குடித்து உயிரிழக்கவில்லை என்று கூறிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரேதப்பரிசோதனைக்கு பிறகு அவர்கள் எப்படி உயிரிழந்தார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகும் எனத் தெரிவித்தார். ஆனால் உயிரிழந்தவர்களின் மனைவி மற்றும் உறவினர்கள் மது குடித்துதான் அவர்கள் உயிரிழந்தார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இறந்தவர்களின் உறவினர்கள் கூறும் போது, இரவு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பிறகுதான் கண் எரிச்சல், வயிற்று வலி, வாந்தி போன்றவை ஏற்பட்டது. அப்போது அவர்களிடம் கேட்டதற்கு மது குடித்துவிட்டு வந்தேன் என்றார்கள். மதுவால், நிறைய குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட கடைசி குடும்பம் எங்கள் குடும்பமாக இருக்கட்டும். இனிமேலாவது சட்டவிரோத மது விற்பனையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், மது வியாபாரியான கண்ணுகுட்டி என்ற கோவிந்தராஜை பொலிஸார் கைது செய்துள்ளனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago